News August 7, 2024
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, கிரிவலம் செல்லும் நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.19 திங்கட்கிழமை அதிகாலை 2: 58 மணிக்கு முழுநிலவு ஆரம்பமாகி 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.02 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரங்களில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 25, 2025
தி.மலை: 40 பாட்டில் மது விற்பனையில் சிக்கிய பெண்கள்!

தண்டராம்பட்டு பகுதியில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக வாணாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் ரோந்து சென்றனர். அங்கு 4 பேரிடம் விசாரணை நடத்தினர். சாந்தா, சக்கரவர்த்தி, மொய்யூர் கிராமம் அம்பிகா வரகூர் கிராமம் சுசிலா தெரிந்தது. மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது தெரிந்தது. போலீசார் 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
News December 25, 2025
திருவண்ணாமலை: 38 பேர் அதிரடி கைது

செய்யாறு புறவழிச்சாலையில் உள்ள அரசு மதுக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அதனை அகற்ற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, மாவட்டத் தலைவர் எச்.ஜமால் தலைமையில் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட 16 பெண்கள் உள்பட 38 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News December 25, 2025
தி.மலை: நீச்சல் கற்று தர சென்றவர் பரிதாப பலி!

வந்தவாசி அடுத்த மோட்டுகுடிசை கிராமத்தைச் சேர்ந்த அஜய்குமார் (23), தனது உறவுவழி தம்பி அவினேஷ்குமாருக்கு கிணற்றில் நீச்சல் கற்றுகொடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அஜய்குமார் நீரில் மூழ்கினார். தகவலின் பெயரில் தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அஜய்குமார் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினார்.


