News August 8, 2024
திருவண்ணாமலையில் ஒரு வடை ரூ.28,000-க்கு ஏலம் போனது

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே துரிஞ்சிக்குப்பம் குளக்கரையில் ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடிபூரத்தையொட்டி நேற்று கொதிக்கும் எண்ணெய்யில் பக்தர்கள் வெறும் கையால் வடை எடுக்கும் வேண்டுதல் நடைபெற்றது. இவ்வாறு எடுக்கப்பட்ட வடைகளை குழந்தையில்லா தம்பதியினர் ஏலம் கேட்டனர். முதல் வடை ரூ.28,000-க்கும், 2-வது வடை ரூ.24,100-க்கும், 3-வது வடை ரூ.25,500-க்கும் ஏலம் போனது.
Similar News
News October 17, 2025
தி.மலை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.17) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன. தி.மலை எஸ்.கே.பி இன்ஜினியரிங் கல்லூரி, வந்தவாசி-முத்து குமரன் மண்டபம், சுமங்கலி-வி.பி.ஆர்.சி கட்டிடம், என்.எஸ். செல்வம் மஹால்-கீழ்சீத்தாமங்கலம், சுகன்யா திருமண மண்டபம்-சோ.மண்டப்பட்டி, சேத்துப்பட்டு-ராஜா முருகன் திருமண மண்டபம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
News October 17, 2025
திருவண்ணாமலை: ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
தி.மலை: VOTER ID ல இத மாத்தனுமா??

தி.மலை மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
<
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5. புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.