News October 23, 2025
திருவண்ணாமலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.23) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, துரிஞ்சாபுரம்- தனியார் திருமண மண்டபம், ஆர்ப்பாக்கம் – ஸ்ரீ முருகன் கோவில், கீழ்பென்னாத்துார்- தனியார் திருமண மண்டபம், பல்லமிஷன் தெரு, கீழ்பென்னாத்துார், வெம்பாக்கம்- விபிஆர்சி கட்டிடம் அரசங்குப்பம், வந்தவாசி- சமுதாயக்கூடம், கீழ்கொடுங்காலுார் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.
Similar News
News October 23, 2025
திருவண்ணாமலையில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
News October 23, 2025
திருவண்ணாமலை: ஆற்றை கடக்க முடியாமல் தவித்த அரசு பேருந்து

திருவண்ணாமலையில் பெய்து வரும் மழை காரணமாக போளூர் – வேலூர் வரை செல்லும் 777 பேருந்து, நம்மியம்பட்டு அருகே பேராற்றில் மழை வெள்ளத்தை கடக்க முடியாமல் தவித்தது. இதனால் பேருந்தில் பயணித்த மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்லும் அனைவரும் தவித்தனர். இந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற மக்களின் நீண்ட கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
News October 23, 2025
தி.மலை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (22.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


