News August 10, 2025
திருவண்ணாமலையில் இயற்கை விவசாய சந்தை

திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று (ஆக.10) இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக ரசாயனம் கலப்படம் செய்யப்படாத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், மூலிகை வகைகள், கீரைகள், நாட்டு விதைகள், மரபு விதைகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர்.
Similar News
News August 10, 2025
தி.மலை கோயில் இத்தனை பழமையானதா?

தி.மலை தமிழ்நாட்டின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். சங்க இலக்கியத்தில் கூட இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 2500 ஆண்டுகளுக்கு முன்பே தொண்டைமான் இளந்திரையன் இந்த நகரத்தை ஆண்டுள்ளார். பல்லவர், சோழர் இங்கு ஆட்சி செய்துள்ளனர். சிவனின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. 25 ஏக்கர் பரப்பளவில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய சிவன் கோயிலாக இது உள்ளது. இந்த மலை 260 கோடி ஆண்டுகள் பழமையானது
News August 10, 2025
தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 10, 2025
தி.மலை: ரயில்வேயில் சூப்பர் வேலை; கைநிறைய சம்பளம்

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <