News August 8, 2024
திருவண்ணாமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழையே பெய்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 6 வட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
Similar News
News August 23, 2025
தி.மலை: தேங்காய் விழுந்து 6 மாத குழந்தை பலி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தேவிகாபுரம் மலையாம்புரவடை கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி அமுதா. அமுதா தனது 5 மாத பெண்குழந்தையை வீட்டின் வெளியே வைத்திருந்த போது, மரத்தில் இருந்து குழந்தையின் தலையில் விழுந்து பலத்த அடிபட்டது. வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில், குழந்தை நேற்று உயிரிழந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News August 23, 2025
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (22.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 22, 2025
தி.மலை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தி.மலை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க