News January 17, 2025

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்

image

திரு​வூடல் – மறுவூடல் திரு​விழாவையொட்டி, அண்ணா​மலை​யார் நேற்று (ஜன.16) கிரிவலம் சென்​றார். 14 கி.மீ., ​வுக்கு கிரிவலம் சென்ற அண்ணா​மலை​யாரை பின்​தொடர்ந்து ஆயிரக்​கணக்கான பக்தர்​களும் சென்​றனர். வழியெங்​கும், மண்டகபடி மற்றும் கற்பூர தீபாராதனை காண்​பித்து பக்தர்கள் வழிபட்​டனர். தொடர்ந்து, சுவாமிக்​கும், அம்பாளுக்​கும் மறுவூடல் நிகழ்ச்சி நடைபெற்​றது. பின், இருவரும் பக்தர்​களுக்கு அருள்​பாலித்​தனர்.

Similar News

News August 21, 2025

தி.மலை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 21, 2025

தி.மலை: டிகிரி போதும்; ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

REPCO வங்கியில் Customer Service Associate/ Clerk வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். முக்கியமாக இந்த பணிக்கு online தேர்வு மட்டுமே, நேர்முக தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த சூப்பர் வாய்ப்பை டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 21, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியிட மாற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வம் தி.மலை மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலராகவும், அங்கு பணியாற்றிய சிராஜ் பாபு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுவாரியம் துணை ஆட்சியராகவும், நீலகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சதீஷ்குமார், திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!