News May 17, 2024
திருவண்ணாமலைக்கு 85 பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 23 ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் இருந்து ஆற்காடு, ஆரணி வழியாக 44 பேருந்துகள், தினசரி காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் கூடுதலாக 30 பேருந்துகள் என மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது.
Similar News
News October 25, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (24.10.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
News October 24, 2025
மீனவர்கள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தல்!

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ள நிலையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்றைக்குள் கரை திரும்ப சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை காசிமேடு மற்றும் பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் புயல் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி வருகின்றனர். மேலும் மீனவர்கள் சங்கத்தினர் விசைப்படகு பாதுகாப்பான இடங்களில் நிறுத்தினர்.
News October 24, 2025
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

சென்னையில் நாளை (அக்.25) அனைத்து பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை அட்டவணைப் படி பணி நாளாக செயல்படும் என முதன்மை கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். தீபாவளிக்கு அக்.21 அன்று அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*


