News October 25, 2025

திருவண்ணாமலைக்கு விரைவில் ஹேப்பி.. உத்தரவு

image

திருவண்ணாமலை, மலைப்பகுதிகளிலும், நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு விரைவாக அகற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மலைப் பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என நேற்று வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Similar News

News October 25, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (அக்:25) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News October 25, 2025

தி.மலை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தி.மலை மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக் <<>>செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

News October 25, 2025

தி.மலை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!