News October 17, 2024
திருவண்ணாமலைக்கு துணை முதல்வர் நாளை வருகை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்கள் முன்னேற்றம் மற்றும் அதனை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தலோசிக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (18-10-2024) மாலை வருகிறார். மேலும் நாளை மறுநாள் 19-ஆம் தேதி அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
Similar News
News November 19, 2024
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (19.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 19, 2024
திமலை கார்த்திகை மாத சோமவார 1008 சங்காபிஷேகம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் சோமவார தினமான நேற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சாமி சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த பூஜையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
News November 19, 2024
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு சிறை
வந்தவாசி தாலுக்கா வங்காரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (55) கடந்த 2019 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதிபதி பார்த்தசாரதி நேற்று பெருமாளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.