News February 1, 2026

திருமாவின் பேச்சுக்கு கடும் கண்டனம்: டிடிவி

image

தமிழ் கலாச்சாரம் அழிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழிவகுத்தனர் என பேசிய திருமாவளவனை, TTV தினகரன் கண்டித்துள்ளார். அம்மன்னர்கள் தமிழர் பாரம்பரியத்தை போற்றிப் பாதுகாத்ததாக SM-ல் குறிப்பிட்டுள்ள TTV, திமுக தலைவர்களை திருப்திப்படுத்தவே திருமா அவதூறுகளை பரப்புவதாக கூறியுள்ளார். மேலும் கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய பெயர்கள் தமிழ் தானா என கேட்கும் துணிச்சல் திருமாவுக்கு உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News February 9, 2026

பெரம்பலூர்: போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி!

image

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய-மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி., பேங்கிங் போன்ற மத்திய அரசு முகமைகளால் நடத்தப்படும் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 16-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. ஷேர் பண்ணுங்க!

News February 9, 2026

காலையில் இதை சாப்பிட்டால் முடி உதிராது

image

இளம் வயதிலேயே பலரும் முடி உதிர்வு பிரச்னையால் அவதியடைகின்றனர். இது அவர்களை மன ரீதியாகவும் பாதிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்னைக்கு ஜீன் ஒரு காரணமாக இருந்தாலும், உணவு முறையே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் காலை உணவாக சில சத்தான உணவை எடுப்பதன் மூலம் முடி உதிர்வை தடுக்கலாம். அது என்னென்ன உணவு என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.

News February 9, 2026

தோல்வியில் முடிந்ததா ராமதாஸ் முயற்சி?

image

ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணியில் சேர்க்கும் எண்ணத்தை திமுக, அதிமுக இரண்டுமே ஏறக்குறைய நிறுத்திவிட்டன. இந்நிலையில் தவெக மற்றும் நாதகவிடம், நாம் மூவரும் ஏன் கூட்டணி சேரக்கூடாது என ராமதாஸ் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் உஷாரான நாதக தரப்போ, அண்ணன் சீமான் பிப்.21-ம் தேதி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார். அதே வேகத்தில் பிரசாரத்துக்குக் கிளம்புகிறார் என சொல்லி அவர்களும் கதவை அடைத்துவிட்டார்களாம்.

error: Content is protected !!