News December 26, 2025
திருமாவளவனும் சங்கி தான்: தமிழிசை

வடமாநிலங்களின் சில இடங்களில் கிறிஸ்துமஸ் விழாக்களை உருக்குலைத்த சம்பவங்களை மேற்கோள்காட்டி, தமிழகத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தால் இப்படித்தான் இருக்கும் என திருமா விமர்சித்திருந்தார். இந்நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு முத்திரை குத்தக்கூடாது என தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். மேலும், திருமாவளவனும் சங்கி தான் என அவர் காட்டமாக சாடினார்.
Similar News
News January 10, 2026
தங்கம் விலை ஒரே வாரத்தில் ₹2,400 உயர்வு

இந்த வார வர்த்தக முடிவில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,400 அதிகரித்துள்ளது. கடந்த வாரம் (ஜன.3) 22 கேரட் தங்கம் சவரன் ₹1,00,800-க்கு விற்பனையான நிலையில், தற்போது ₹1,03,200- ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் கிலோ வெள்ளி ₹18,000 உயர்ந்து, ₹2.75 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது. விடுமுறை தினம் என்பதால், நாளை விலையில் மாற்றம் இருக்காது.
News January 10, 2026
வளமான நாடுகளின் பட்டியல்

உலகளாவிய செழிப்பு ஆய்வு 2025(Global Flourishing Study 2025) பல்வேறு நாடுகளில் மக்கள் வாழ்க்கையை எவ்வளவு சிறப்பாக வாழ்கிறார்கள் என்பதை மதிப்பிட்டுள்ளது. இந்த ஆய்வு, பொருளாதார வளர்ச்சியை மட்டும் கணக்கில் கொள்ளாமல், மக்கள் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதை மையமாக கொண்டுள்ளது. அதன்படி, எந்தெந்த நாடுகள், எவ்வளவு மதிப்பெண்ணுடன் உள்ளன என்று மேலே பகிர்ந்துள்ளோம். ஸ்வைப் செய்து பாருங்க.
News January 10, 2026
விருத்தாசலத்தில் களமிறங்க பிரேமலதா திட்டம்!

விஜயகாந்த் பாணியில் வரும் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் களமிறங்க பிரேமலதா தயாராகி வருகிறார். அதனைக் கருத்தில் கொண்டே கடலூரில் நேற்று அக்கட்சியின் மாநாடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, 2011 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனதை போல, பிரேமலதா வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று துணை முதல்வராவார் என LK சுதீஷ் பேசியிருந்தார். இது பற்றி உங்கள் கருத்து?


