News November 20, 2024
திருமருகலில் பாம்பு கடித்து முதியவர் பலி

திருமருகலை சேர்ந்தவர் உத்திராபதி (80). இவர் நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கையில் பாம்பு கடித்துள்ளது. இதில் உத்திராபதி வலியில் கத்தியுள்ளார். உடன் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
நாகை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 7, 2025
நாகை : அழுகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள்

நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்கள் வயல்களில் அழுகி சேதமடைந்த நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி, உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கீழையூர் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கத்தினர் வந்தனர். சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்டதாகவும், முழுமையான நிவாரணம் வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
News December 7, 2025
நாகை: அரசு ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு

திருக்குவளையை சேர்ந்த ராதா மின்வாரிய அலுவலகத்தில் கமர்சியல் ஆய்வாளரான இவர் பைக்கில் பின்னால் அமர்ந்து மேலப்பிடாகைலிருந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் ராதா அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை அறுத்து கொண்டு தப்பி சென்றனர். இதையடுத்து ராதா அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீஸ் விசாரணையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஏங்கள்ஸ், பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.


