News April 12, 2025
திருமண வரம் தரும் மயூரநாதர் கோயில்

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி இன்று. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பனப்பாக்கத்தில் அமைந்துள்ளது மயூரநாதர் கோயில். அகத்தியருக்கு கைலாய மலையில் இருந்து சிவன் திருமண காட்சியை அருளிய தலம் என்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து மயூரநாதரை வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. திருமண வரன் பார்த்துக்கொண்டிருக்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க..
Similar News
News April 13, 2025
ஆற்காட்டில் ரூ 35 கோடி மதிப்பில் புறவழி சாலை

ஆற்காட்டில் ரூ.35 கோடியில் புறவழிச்சாலை (பைபாஸ்) அமைக்கும் பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புதிதாக 3.46 கிமீ தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நபாா்டு மற்றும் கிராம சாலை துறை சாா்பில் ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டது. சாலைப் பணிகள் தொடக்க விழா வேப்பூா் ஊராட்சி பொன்னியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.
News April 13, 2025
இரு பைக்குகள் மோதி விபத்து – வாலிபர் உயிரிழப்பு

வேடல் கிராமம் பெரியார் நகரில் அரக்கோணம் – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இறந்தவர் யார் என அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 12, 2025
ராணிப்பேட்டை சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 211 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். அந்தந்த வட்டாரங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.