News April 13, 2025

திருமண தடை நீக்கும் வள்ளிமலை முருகன்

image

காட்பாடி அருகே வள்ளிமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. முருகனை கணவனாக அடைய வள்ளி இங்கு வழிபட்டதால், திருமணமாகாத பெண்கள் இங்குள்ள சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டால் விரைவில் திருமணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் நாளை தமிழ் புத்தாண்டு என்பதால் வள்ளிமலை முருகனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். ஷேர் பண்ணுங்க

Similar News

News February 12, 2026

வேலூர் சிறையில் 45 பேர் தேர்வுக்கு தயார்!

image

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் இந்த ஆண்டு 15 சிறைவாசிகள் +2 தேர்வை எழுத உள்ளனர். அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வை ஆண்கள் சிறையில் 12 பேர், பெண்கள் சிறையில் 8 பேர் என மொத்தம் 45 கைதிகள் எழுத உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக மத்திய சிறையில் தேர்வு மையம் அமைந்துள்ளது.

News February 12, 2026

வேலூரில் நள்ளிரவில் திடீர் தீ!

image

வேலூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட ஓட்டேரி பகுதியில் மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று ( பிப்.11 ) இரவு தீவிபத்து ஏற்பட்டது. தீயினால் குப்பைகள் எரிந்து அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து வேலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு எரிந்து கொண்டிருந்த குப்பையை அனைத்தனர்.

News February 12, 2026

வேலூரில் மாவட்ட நிர்வாகம் அனுமதி!

image

வேலூர் மாவட்டத்தில் மேலும் 2 கிராமங்களில் மாடு விடும் விழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி கே.வி.குப்பம் தாலுகா பள்ளத்தூரில் இன்றும் (பிப்.12 ), கணியம்பாடியில் வரும் 16-ந் தேதியும் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளது. விழா குழுவினர் 15 நாட்களுக்கு முன்பே மாடு விடும் திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கோரி விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!