News April 5, 2025
திருமண தடை நீக்கும் லிங்க விநாயகர்

விநாயகரின் தனித்துவமே மனித உடலும், யானை தலையும் கொண்ட அவரது தோற்றம் தான். இதற்கு மாறாக விழுப்புரம் தீவனூர் கிராமத்தில் உள்ள பொய்ய மொழி விநாயகர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யும் போது அதில் விநாயகரை காண முடியும்.இங்கு விழுது இல்லாமல் ஒன்றோடு ஒன்று பின்னி உள்ள ஆலமரங்களை சுற்றி வந்தால் திருமண தடை நீங்கும் . அரிய விநாயகரை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
Similar News
News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள்<
News April 6, 2025
ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற,தம்பதியில் ஒருவர் SC/ST போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும்,மற்றொருவர் BC/MBC போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். https://ambedkarfoundation.nic.in/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
News April 6, 2025
கிணற்றில் விழுந்த வாலிபர் பலி

செஞ்சி அடுத்த கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(31). திருமணம் நடந்து, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று (ஏப்.5) மதியம் 12 மணியளவில் விவசாய கிணற்றின் அருகே நடந்து சென்ற போது வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் விழுந்தார். உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.