News April 24, 2025
திருமண தடை நீக்கும் குடைவரை கோயில்

செங்கல்பட்டு மாவட்டம் வல்லத்தில் வேதாந்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. எங்கெல்லாம் முதிர்ந்த பாறைகள் உள்ளதோ அங்கெல்லாம் கல்குடைந்து கோவில் கட்டிய பல்லவர்கள் இதையும் குடைவரை கோயிலாக காட்டியுள்ளனர். சூரிய கதிர்கள் நேரடியாக கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழும் வகையில் கட்டப்பட்ட இந்த கோயிலில் வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
Similar News
News April 24, 2025
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மனுதாரர்கள் ஜூன் 10ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணுங்க
News April 24, 2025
இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News April 24, 2025
பைக் விபத்தில் ஐ.டி. ஊழியர் பலி

திருச்சியைச் சேர்ந்த தினேஷ், செங்கண்மால் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சிறுசேரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 23) நள்ளிரவு வேலை முடிந்து கேளம்பாக்கம் புதிய புறவழிச்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இளவந்தாங்கல் ரவுண்டானா அருகே சென்றபோது பைக் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.