News December 29, 2025
திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்: பிரபாஸ்

பிரபல நடிகர் பிரபாஸ் 46 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் அவர் நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில், இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பட்டது. அதாவது பிரபாஸை மணக்க விரும்பும் பெண்ணுக்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என கேட்கப்பட்டது. அதற்கு, அந்த உண்மை தெரியாமல்தான் தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என பிரபாஸ் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
Similar News
News January 30, 2026
FLASH: தமிழகம் வரும் PM மோடி!

பிப்ரவரி 3-வது வாரத்தில் PM மோடி TN வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 23-ம் தேதி வட மாவட்டங்களை குறிவைத்து மதுராந்தகத்தில் NDA சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் PM மோடி உரையாற்றினார். இந்நிலையில், கொங்கு மண்டலத்தில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் PM மோடி பங்கேற்க உள்ளார். மார்ச் 2-வது வாரத்தில் பேரவைத் தேர்தல் தேதி வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
News January 30, 2026
உலகின் நீளமான நடைபாதை.. மொத்தம் 22,387 கிமீ

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் முதல் ரஷ்யாவின் மகதான் வரை நீளும் சாலையே, ஒரு நபர் நடந்து செல்லக்கூடிய உலகின் மிக நீளமான சாலையாக உள்ளது. சுமார் 22,387 கிமீ நீளம் கொண்ட இப்பாதை 17 நாடுகளை கடந்து செல்கிறது. போர்கள், விசா சிக்கல்கள் மற்றும் கடுமையான குளிர் போன்ற காரணங்களால் இந்த சாலையில் இதுவரை யாரும் பயணம் மேற்கொண்டதில்லை.
News January 30, 2026
தமிழகம், புதுச்சேரியில் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலார் நினைவு நாளையொட்டி, நாளை மறுநாள் (பிப்.1) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை மூடுவது குறித்து டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சுற்றறிக்கை அனுப்பி வருகின்றனர். இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் அன்றைய தினம் மதுக்கடைகள், பார்கள் மூடப்படும் என அம்மாநில கலால் துறை அறிவித்துள்ளது.


