News March 14, 2025
திருமணமான பெண்ணை தாக்கிய பாய் பெஸ்ட்டி

கள்ளக்குறிச்சிம், திருக்கோவிலூரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், கடந்த 10ம் தேதி, விழுப்புரம் அடுத்த கலிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்த, 22 வயதுடைய தனது பழைய பெண் நண்பரின் வீட்டிற்கு சென்று திருமணம் ஆன பிறகும், நட்பாக பழக வேண்டும் என கூறி தகராறு செய்துள்ளார். இதில் அப்பெண்ணை புண்ணியமூர்த்தி நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறை புண்ணியமூர்த்தியை கைது செய்தது.
Similar News
News March 14, 2025
பித்ருக்கள் தோஷம் நீக்கும் வீரசோழபுரம் சிவன்

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிறப்பாக நான்கு வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News March 14, 2025
கள்ளக்குறிச்சி கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 22 இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 17ஆம் தேதிக்குள் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரை அணுகி ஏலம் எடுத்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்த அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
News March 14, 2025
மூன்று இடங்களில் நிதிநிலை அறிக்கை நேரலை

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2025-26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூன்று இடங்களில் நிதிநிலை அறிக்கை தொடர்பான நிகழ்வு நேரலை செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர் பேருந்து நிலையங்களில் நிதிநிலை அறிக்கை நேரலை செய்யப்படுகிறது.