News April 3, 2025
திருமணத் தடை நீக்கும் அரியலூர் கார்க்கோடேசுவரர் கோயில்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே இந்த காமரசவல்லி கார்க்கோடேசுவரர் கோயில் உள்ளது. இது சுந்தரச் சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் மூலவர்கள் கார்க்கோடேசுவரர் மற்றும் இறைவி பாலாம்பிகை ஆவார். நாகங்களின் அரசரான கார்க்கோடன் இறைவனை வழிபட்ட தலமாகும். இங்கு வழிபட்டால் திருமணத் தடை நீங்கி மனதிற்கு பிடித்த வரன் அமையும், மேலும் குழந்தை பேறு மற்றும் பிரிந்த தம்பதி மீண்டும் சேருவர். இதை பகிரவும்
Similar News
News November 7, 2025
அரியலூர்: புதிய நூலக கட்டிடம் திறப்பு

ஜெயங்கொண்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தினை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் அவர்கள் நூலகத்தை பார்வையிட்டு, தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க கோரி அரசு அலுவலர்களிடம் கூறினார்.
News November 7, 2025
அரியலூர்: 12th போதும்! அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 7, 2025
அரியலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் தாசில்தார் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகள், பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


