News April 24, 2024
திருமணத்திற்கு சென்று திரும்பிய வாலிபர் பலி

பொன்னேரி அடுத்த பழவேற்காடு செம்பாசிபள்ளி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (26). இவர் நேற்று பெரியபாளையத்தில் உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு விடியற்காலை வீட்டிற்கு பைக்கில் பழவேற்காட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பொன்னேரி அடுத்த பிரளயம்பாக்கம் சாலை கல்வெட்டில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 5, 2025
திருவள்ளூரில் வீட்டு, நில பத்திரத்தில் பிரச்னையா ?

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <
News July 5, 2025
திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறப்பு

திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் 5 ஏக்கரில் இந்த திட்டம் 2023 ஜூலை தொடங்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் இயக்கத்துக்கு, வசதியாக அடிப்படை கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்ப்பு.
News July 5, 2025
திருவள்ளூரில் திறக்கப்பட்டது ஆம்ஸ்ட்ராங் சிலை

திருவள்ளூரில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் சிலை இன்று (ஜூன் 5) திறக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில், கோரிக்கை மனு சமர்பித்து, அனுமதி வழங்கியதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் சிலையை திறந்துவைத்தார் தலைமை நீதிபதியின் தாயார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5,2024, சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.