News October 23, 2024
திருப்போரூரை நகராட்சியாக தரம் உயர்த்த முடிவு

பேரூராட்சி மற்றும் அருகில் உள்ள ஊராட்சிப் பகுதிகளை ஒருங்கிணைத்து, புதிய நகராட்சிப் பகுதியாக தோற்றுவிக்க உள்ள உள்ளாட்சி நிர்வாகங்களின் பட்டியலில், திருப்போரூர் இடம்பெற்றுள்ளது. திருப்போரூர் பேரூராட்சியுடன், சுற்றுப்புற ஊராட்சிப் பகுதிகளை இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை பரிசீலித்து வருகிறது. இதனால், புதிய நகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 75,000 பேருக்கு மேல் உயரும்.
Similar News
News October 24, 2025
செங்கல்பட்டு: மின் தடையா..? உடனே CALL!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 24, 2025
செங்கல்பட்டு: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <
News October 24, 2025
செங்கல்பட்டு: பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட நபரால் பரபரப்பு

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர், தென்பாதி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மதியம், தன் வீட்டின் அருகேயுள்ள பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுப்ரமணியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


