News October 14, 2025

திருப்போரூரில் மாட்டால் நிகழ்ந்த மரணம்!

image

திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டைச் சேர்ந்த கண்ணன் (42) என்பவர், கடந்த 9-ஆம் தேதி வேலைக்குச் சென்றபோது, காலவாக்கம் அருகே மாடு குறுக்கே ஓடியதால், அவரது பைக் நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதியது. விபத்தில் படுகாயமடைந்த கண்ணன், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 14, 2025

குறைதீர்வு கூட்டத்தில் 312 மனுக்கள் ஏற்பு

image

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன்காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிமளா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய,312 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை விசாரித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.

News October 14, 2025

செங்கல்பட்டில் 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

செங்கல்பட்டு: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. BE பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். <>விண்ணப்பிக்க <<>>அக்.18 கடைசி தேதி. நேரடித் தேர்வு/நேர்காணல் இல்லை. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!