News August 31, 2025
திருப்பூர்: LIC வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️ எல்.ஐ.சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ▶️இதற்கு 21 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️சம்பளம் ரூ.88,635 முதல் ரூ.1,50,025 வரை வழங்கப்படும். ▶️விண்ணப்பிக்க ஒரு டிகிரி வேண்டும். ▶️ https://ibpsonline.ibps.in/licjul25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ▶️விண்ணப்பிக்க செப்.8 கடைசி ஆகும். மேலும், விவரங்களுக்கு <
Similar News
News September 1, 2025
திருப்பூரின் அடையாளம் சரிந்த கதை!

திருப்பூரில் சாந்தி தியேட்டர் தெரியாத ஆளை பார்க்கவே முடியாது. ஏறத்தாழ 45 அண்டுகளுக்கும் மேலாக விசில் சத்தங்கள், ஆரவாரங்கள் என திருப்பூர்வாசிகளின் வாழ்வியலில் கலந்திருந்த சாந்தி தியேட்டர் தற்போது மல்டி பிளக்ஸ் வருகையால் நலிவடைந்து, குடோனாக மாறியுள்ளது. இந்தத் தியேட்டரில் நீங்கள் பார்த்த மறக்க முடியாத திரைப்பட அனுபவங்கள், கதைகள் குறித்து கீழே கமெண்ட் பண்ணுங்க. நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!
News September 1, 2025
திருப்பூரில் 1,100 விநாயகர் சிலைகள் கரைப்பு

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,100 விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. பிரம்மாண்ட ஊர்வலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், நடிகர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News September 1, 2025
திருப்பூரில் குப்பை தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு

திருப்பூர், தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையம் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் 8 மாதமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்களின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.