News August 27, 2025

திருப்பூர்: IMPORTANT வாடகை வீட்டு வாசியா நீங்க!

image

திருப்பூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News November 8, 2025

திருப்பூரில் இருவர் அதிரடி கைது!

image

திருப்பூர் வடக்கு போலீசார் குளத்துப்பாளையம் சோதனை சாவடியில், சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தீபக் குமார்(25) மற்றும் ரவி பட்டேல்(23) என்பதும், இவர்களிடம் 650 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News November 7, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 07.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News November 7, 2025

திருப்பூரில் பாலியல் தொழில்: 2 பேர் கைது

image

திருப்பூர், கரட்டாங்காடு அருகே வீட்டில் பாலியல் தொழில் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த முகமது ரபிக் மற்றும் விஜயராணி என்று இருவரை கைது செய்தனர். அங்கு இருந்த பெண்ணை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!