News January 16, 2026

திருப்பூர்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே<> கிளிக்<<>> செய்து பதிவு செய்யுங்கள். அதிகம் ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 24, 2026

திருப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திருப்பூர் மாவட்டத்திட்குட்பட்ட 265 ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் 26ம் தேதி கிராம சபா கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மனிஷ் தெரிவித்துள்ளார். இது காலை 11 மணிமுதல் நடைபெறும் எனவும், பொதுமக்கள் கலந்து கொண்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தெரிவிக்கலாம். மற்றும் ஊராட்சியின் நிதி அறிக்கையும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

News January 24, 2026

திருப்பூர் கொலை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

திருப்பூர், கங்கா நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே, அனில் குமார் ஜெனா என்பவர் கொலை செய்த வழக்கில், இளம் சிறார் கைது செய்யப்பட்டு, கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இளைஞரை ஓராண்டு செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் வைக்க நீதிபதி செந்தில் ராஜா உத்தரவிட்டுள்ளார்.

News January 24, 2026

திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்கள்!

image

திருப்பூர், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போயம்பாளையம் பகுதியில், போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த நபர்களை விசாரணை செய்தபோது, அவர்களிடம் கூர்மையான வாள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராகவா ஆனந்த், மருதுபாண்டி மற்றும் மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்து, வாள் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!