News May 15, 2024

திருப்பூர்: 5 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் ஐந்து அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி நேற்று பெற்றது. சூரியம்பாளையம் எஸ் முருகப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் 18 மாணவர்கள், 13 மாணவிகள் என 31 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அதேபோன்று புது ராமகிருஷ்ணாபுரம் நகரவை மேல்நிலைப் பள்ளியில் 152 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

Similar News

News March 7, 2026

திருப்பூரை சேர்ந்தவர் பலி!

image

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த செந்தில்குமார், கோவை வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றபோது முதலாம் மலைப் பாதையில் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் அவரை டோலி கட்டி மீட்டு அடிவாரத்திற்குத் தூக்கி வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

News March 7, 2026

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 7, 2026

11 பேருக்கு அபராதம்

image

திருப்பூர் கொங்குநகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மது போதையில் வாகனம் ஓட்டியதாகவும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 11 நபர்களுக்கும் மொத்தம் ரூ. 1,21,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!