News September 15, 2025

திருப்பூர்: 12th போதும் வங்கி வேலை!

image

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. படிப்பு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க https://nabfins.org/Careers/ இந்த லிங்கை அணுகவும். SHARE பண்ணுங்க!

Similar News

News September 15, 2025

மாவட்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் தையல் இயந்திரம் மற்றும் தலா ரூ.5 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் 4 பயனாளிக்களுக்கு ரூ.26 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் சலவைப்பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.

News September 15, 2025

திருப்பூரில் வெறிநாய் கடித்து ஆடுகள் பலி

image

திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகேயுள்ள பேரநாய்க்கன்வலசு கிராமத்தில், ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட ஆடுகளை, வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாயின. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயி குமார், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நாய்களை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை.

News September 15, 2025

திருப்பூரில் 12 வயது சிறுவன் பரிதாபமாக பலி!

image

திருப்பூர்: காங்கேயம் அருகே அரசம்பாளையம் தேங்காய் களத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சாபூர்அலி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது 12 வயது மகன் நேற்று(செப்.14) அப்பகுதியில் விளையாடிய போது, கேட் கழன்று சிறுவன் மீது விழுந்ததில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!