News March 17, 2025
திருப்பூர்: 1100 பேருக்கு புதிய பாஸ்போர்ட்

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி திறக்கப்பட்டது. திருப்பூரில் துவங்கப்பட்ட பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் மூலம் கடந்த ஜனவரி 24 முதல் மார்ச் 14 வரை 1,400 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் 1,100க்கும் மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 10, 2025
தாராபுரத்தில் மோதல்!

திருப்பூர், தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பாக சுமார் 15-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் விபத்து ஏற்பட்டால் யார் முதலில் செல்வது என்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மதன்குமார் மற்றும் மனோஜ் குமார் ஆகிய இருவர் காயமடைந்த நிலையில், புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 10, 2025
திருப்பூர் மக்களே பயப்புடாதீங்க!

திருப்பூர் மக்களே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். erolls.tn.gov.in/blo என்ற இணையதளத்தில் உங்கள் ஏரியாவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் அலுவலரின் செல்போன் எண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு அலுவலர் எப்போது வருவார் என முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். (SHARE)
News November 10, 2025
திருப்பூரில் தவறி விழுந்தவர் பலி

திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்து ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த, திருப்பூர் தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் GH-க்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், இறந்தவர் அந்த பகுதியை சேர்ந்த நாகராஜ் (58) என்பதும், வலிப்பு ஏற்பட்டு கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.


