News April 5, 2025
திருப்பூர்: வீரராகவ பெருமாள் கோயில்

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீர ராகவரை வணங்கினால் சகல பிரச்சனைகளும் நீங்குமாம். கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கியுள்ளவர்கள், சனிக்கிழமைகளில் வீரராகவரை வந்து வணங்கி, ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தால், அந்த பிரச்சனைகள் நீங்குமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News April 6, 2025
ரேசன் கார்டு தாரர்களுக்கு சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அட்டையில் பெயர் திருத்தம் செய்ய, குழந்தைகளின் பெயரை சேர்க்க அல்லது உறுப்பினர்கள் பெயரை நீக்க, ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பான குறைகள் சரி செய்ய, மண்டலம் விட்டு மண்டலம் மாறப்போகிறவர்கள் என அனைத்து ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளுக்கும் உடனடி தீர்வாக வரும் ஏப்ரல் 12ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
News April 6, 2025
அங்கன்வாடி வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்தவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் மாவட்டங்களில் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 10 அங்கன்வாடி பணியாளர் மற்றும் 33 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இந்நிலையில் வரும் 23ம் தேதி மாலை 5 மணிக்குள் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
News April 6, 2025
திருப்பூரை வெளுத்தெடுத்த மழை

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்ய துவங்கிய மழை காலை வரை வெளுத்து வாங்கியது. இதனால், திருப்பூர் மாநகரில் ஒரே நாள் அதிகபட்சமாக 15 செமீ மழை பெய்துள்ளது. மழையால் வீடு, பணியின் நிறுவனத்திற்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மக்களே உங்க ஊரியில் மழை பாதிப்பு இருந்தால் கமெண்ட் பண்ணுங்க. இன்று மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ( SHARE பண்ணுங்க.)