News August 25, 2025
திருப்பூர்: விளையாட்டால் நடந்த விபரீதம்!

திருப்பூர்: தாராபுரத்தில் காதணி விழாவிற்கு சென்ற காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வந்த்(19) நேற்று(ஆக.24) அமராவதி ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அஸ்வந்த், மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் யாரும் குளிக்க கூடாது, என போடப்பட்ட எச்சரிக்கையை மீறி விளையாட்டாக குளித்ததால் இந்த விபரீதம் நடந்தேறியுள்ளது எனத் தெரிவித்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News August 25, 2025
திருப்பூரில் நூற்றாண்டு கண்ட மூதாட்டி!

திருப்பூர்: கே.செட்டிப்பாளையத்தில் அன்னபூரணி என்ற மூதாட்டியின் நூறாவது பிறந்தநாள் விழா குடும்ப சங்கமமாக நடைபெற்றது. 6 மகன்கள், 7 மகள்கள், 97 பேரன், பேத்திகள் பங்கேற்று, ஒரே மாதிரி உடை அணிந்து, அன்னபூரணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
News August 25, 2025
திருப்பூரில் நீங்களும் மேனேஜர் ஆகலாம்!

திருப்பூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’மருத்துவ நிர்வாக அதிகாரி’ பணிக்கான பயிற்சி திருப்பூரிலேயே வழங்கப்படுகிறது. கடந்த ஆக.1 ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. மொத்தம் 49 காலிப்பணியிடங்கள் உள்ளன. பயிற்சி பெற்றால் உங்களுக்கு வேலை நிச்சயம். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க<
News August 25, 2025
திருப்பூர்: ஐ.டி.பி.எல் அதிகாரிகள் சிறை பிடிப்பு

2011 ஆம் ஆண்டு கொச்சியில் இருந்து பெங்களூருக்கு விளைநிலங்கள் வழியாக ஐடிபிஎல் நிறுவனம் விவசாயிகளின் போராட்டங்களை மீறி எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இங்கு எரி காற்று குழாய்களை அமைக்க அளவீடு செய்ய இன்று இந்த நிறுவன அதிகாரிகள் இங்கு வந்தனர். இங்குள்ள விவசாயிகள் இவர்களை சிறைப்பிடித்து வைத்ததால் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி விடுவித்தனர்.