News January 11, 2025

திருப்பூர் ரேஷன் கடைக்கு HELMET போட்டு வந்ததால் பரபரப்பு

image

திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டு பெரியதோட்டம் பகுதியில் உள்ள ரேஷன் கடை கட்டடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டடத்தின் மேல் சுவர் பெரும்பாலும் இடிந்துவிட்டது. ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் மீது விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். ஆகவே கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்துவந்து பொங்கல் தொகுப்பு பெற்றனர்.

Similar News

News February 13, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

image

திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் நாளை (பிப்.14, சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தம் மற்றும் புதிய கார்டு விண்ணப்பம் போன்ற சேவைகளைப் பெறலாம். பொதுமக்கள் தங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலக முகாமில் பங்கேற்றுப் பயன் அடையுமாறு கலெக்டர் மனிஷ் நாரணவரே கேட்டுக்கொண்டுள்ளார். SHAREIT

News February 13, 2026

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

image

திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே அருள்ஜோதிபுரம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றிய பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!