News December 15, 2025
திருப்பூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!
Similar News
News December 17, 2025
சிலிண்டர் இருக்கா: அறித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கியாஸ் நுகர்வோர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டமானது வருகிற 24-ம் தேதி (புதன்கிழமை) அன்று மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் (அறை எண் 120-ல்) நடைபெற உள்ளது.இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மனிஷ் கூறினார்.
News December 17, 2025
திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.18) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, பங்களா ஸ்டாப், குமரன் வீதி, வளையாங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர், கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி தியேட்டர், சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணாகாலனி, அங்கேரிபாளையம் ரோடு, கஞ்சம்பாளையம், ராதா நகர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 17, 2025
பல்லடத்தில் தேதி குறித்த DMK

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29-ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. 29-ம் தேதி மாலை 4 மணி அளவில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் CM ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இந்த முறை கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்ற பல்வேறு வியூங்களை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


