News September 6, 2025

திருப்பூர்: ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே, இந்திய விமான நிலைய ஆணையத்தில் Airports Authority of India (AAI) காலியாகவுள்ள 976 Junior Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு Engineering படித்திருந்தால் போதுமானது. இந்த வேலைக்கு சம்பளம் ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள், வரும் 27ம் தேதிக்குள், <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News November 7, 2025

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு பெண் பலி

image

திருப்பூர், ஊத்துக்குளி அருகே புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மைலால் (55). அவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மைலால் வேலைக்கு செல்வதற்காக புதூர் பகுதியில் தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சென்ற திருப்பூர் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 7, 2025

திருப்பூர்: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். (SHARE)

News November 7, 2025

திருப்பூரில் நாளை விடுமுறை இல்லை

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை(நவ.8) பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த அக். 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி வாரத்தில் அக்.22ம் தேதி, மழை காரணமாக திருப்பூர் மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன்படி நாளை (8-ம் தேதி) திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை கூறியுள்ளது.

error: Content is protected !!