News April 18, 2025
திருப்பூர்: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *
Similar News
News December 20, 2025
தாராபுரத்தில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார், தாராபுரம் பொள்ளாச்சி ரோடு அருண் பேக்கரி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர் பல்லடம் பகுதியில் வசிக்கும் பீகாரை சேர்ந்த அஜய் சஹானி (37) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
News December 20, 2025
திருப்பூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News December 19, 2025
திருப்பூர்: இரவு நேர போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (டிச.19) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.


