News January 22, 2026
திருப்பூர்: ரயிலில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருப்பூர் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் இன்று ரயில் நிலையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சாலிமரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் பின்பக்க பின் பதிவில்லா பெட்டியில் சோதனை செய்தனர். சோதனையில் கேட்பாரற்று கிடந்த பையில் 35 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 6, 2026
திருப்பூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY!

திருப்பூர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<
News February 6, 2026
திருப்பூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருப்பூர் மாவட்ட மக்கள் 0421-2482816 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 6, 2026
திருப்பூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


