News December 20, 2025
திருப்பூர் யார் அதிகம் தெரியுமா?

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 18,81,144 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 9,10,083 பெண் வாக்காளர்கள் 9,70,817 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 244 பேர் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 26, 2025
திருப்பூரில் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் இன்று நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
திருப்பூர்: நீங்க கேன் தண்ணீர் குடிக்கிறிங்களா?

திருப்பூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News December 26, 2025
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (டிச.26) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.


