News March 19, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

Similar News

News March 19, 2025

திருப்பூர் மாவட்ட காவல்துறை ரோந்து விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், ஊதியூர், மூலனூர் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுள்ளது.

News March 19, 2025

5 தலைமுறை கண்ட மூதாட்டி மரணம்

image

பல்லடம் அருகே பூமலூர் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமாத்தாள் (110) வயது மூப்பால் நேற்று உயிரிழந்தார். கணவர் முத்துசாமி 22 ஆண்டுகளுக்கு முன் காலமானார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள், 44 பேரன், பேத்திகள் உள்ளனர். 2013இல் சதாபிஷேகம் கொண்டாடப்பட்டது. இறுதிச்சடங்கில் ஐந்து தலைமுறையினர் கலந்து கொண்டனர்.

News March 19, 2025

செல்வமகள் சேமிப்பு திட்டம்: திருப்பூர் 2ம் இடம்

image

செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்குவதில், மாநிலத்தில் 2வது இடத்தை திருப்பூர் தபால் கோட்டம் பெற்றுள்ளது. இதுகுறித்து திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறுகையில், இத்திட்டத்தில் இன்டர்நெட், மொபைல் பேங்கிங், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் திட்டம் வாயிலாக பணம் செலுத்த முடியும். உங்க வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் உடனே, இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். ( Share பண்ணுங்க)

error: Content is protected !!