News March 6, 2025
திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் வரும் 8ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண உள்ளார்கள் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 24, 2025
திருப்பூர்: கேஸ் டெலிவரிக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

திருப்பூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News August 24, 2025
சிசிடிவி கேமரா பொருத்த போலீசார் அறிவுரை

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், குடியிருப்புகள், தோட்டத்து சாலைகள், ஆகிய பகுதிகளில் திருட்டு, கொலை, கொள்ளை, நடக்காமல் இருக்க பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள் தோட்டத்து சாலைகள் முதியவர்கள் குடியிருக்கும் வீடுகளில் CCTV கேமராக்கள் பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
திருப்பூர்: குறைந்த விலையில் பைக், கார்!

திருப்பூரில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 4 மற்றும் 2 சக்கர வாகனங்கள் என மொத்தம் 35 வாகனங்கள் ஏலக்குழுவினரால் வரும் ஆகஸ்ட்.26 காலை 10 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளது. அவினாசி, மடத்துபாளையம் ரோடு. சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் உள்ள திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் நடைபெறும் ஏலத்தில், விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்குமாறு காவல்துறை அறிவிப்பு.