News March 2, 2025
திருப்பூர் மாவட்டத்தில், 25,863 பேர் +2 தேர்வு எழுதுகின்றனர்

நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு, நாளை (3ம் தேதி) துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், தனியார், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் என, 217 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 25 ஆயிரத்து 863 பேர் எழுத உள்ளனர். இதில், 11 ஆயிரத்து 874 மாணவர்கள்; 13 ஆயிரத்து 989 மாணவியர் அடங்கும். தனித்தேர்வர்களாக, 379 பேர் தேர்வெழுதுகின்றனர்.
Similar News
News April 20, 2025
திருப்பூர்: வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்!

சோமனூர் ரகங்களுக்கு 15 சதவீதமும், பல்லடம், அவினாசி ரகங்களுக்கு 10 சதவீதம் என்று கூலி உயர்வு நிர்ணயம். பல்லடம் பகுதியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற உத்தரவாதத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம். நாளை சங்கத்தின் பொதுக்குழு கூட்டி, 2 நாட்களில் விசைத்தறிகளை இயக்குவோம் என உற்பத்தியாளர்கள் தகவல்.
News April 20, 2025
குழந்தை வரம் தரும் வீரக்குமார சுவாமி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே பிரசித்தி பெற்ற வீரக்குமார சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக வீரக்குமார சுவாமி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், மேலும் தீராத நோய்கள், தொழில் மந்தம் போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 20, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 58 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <