News January 20, 2025

திருப்பூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

image

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான வருகிற 26ம் தேதி அன்று காலை 11  மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும். கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 9, 2026

திருப்பூர்: தட்டித்தூக்கிய திமுக!

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 28 வது வார்டு மாஸ்கோ நகர் பகுதியில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய மாவட்ட திமுக மாணவரணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவான செல்வராஜ் முன்னிலையில், திமுகவில் இணைந்து கொண்டனர்.

News March 9, 2026

திருப்பூர் அருகே ரயில் மோதி ஒருவர் பலி!

image

ஊத்துக்குளி-விஜயமங்கலம் இடையே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 9, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் (08.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!