News October 18, 2025

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

image

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அமித் இன்று மண்டலம் இரண்டு தீரன் சின்னமலை வடக்கு பேருந்து நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பஸ் ஏற உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News

News October 19, 2025

திருப்பூர் இரவு ரோந்து பணிகள் போலீசார்

image

திருப்பூர் மாநகரில் இரவு நேரங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் கே வி ஆர் நகர் சரக உதவி ஆணையர் கணேசன் தலைமையில், இரவு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர் குறித்த விபரம் சமூக வலைதளங்களில் மாநகர போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News October 18, 2025

திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் பாலன் (26). பனியன் கம்பெனி ஊழியர். இந்நிலையில் நேற்று பல்சர் பைக்கில் பாலன் சென்றுள்ளார். அப்போது தனியார் பேக்கரி அருகே திரும்பிய போது, எதிரே வந்த லாரி பாலன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாலன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 18, 2025

திருப்பூர்: பைக்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை உங்கள் போனில் ஈஸியா பெறலாம்.இந்த டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரப்பூர்வம் என்பதால், போலீசாரிடமும் லைசன்ஸை, ஆர்.சி புக் டிஜிட்டல் ஆவணங்களை காண்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!