News September 21, 2025

திருப்பூர் மக்களே உஷார்: நூதன மோசடி!

image

திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர், வாட்ஸ் அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். இதன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.10 லட்சம் மாயமானது. இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் பெங்களூரைச் சேர்ந்த ராகுல் மண்டல் என்பவரை கைது செய்துள்ளனர். எனவே பொதுமக்கள் இதுபோன்று தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என காவல்துறை கூறியுள்ளது.

Similar News

News September 21, 2025

திருப்பூர்: +2 போது ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், கணக்காளர் உள்ளிட்ட 7267 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப +2 முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் பணிக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்.23ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHAREit

News September 21, 2025

தமிழக முதல்வரிடம் பரிசு பெற்ற மூலனூர் பள்ளி மாணவி

image

12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள்பெற்ற மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி A.அனுவர்ஷினி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ரூ.10,000 பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் பெற்றார்.

News September 21, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

error: Content is protected !!