News May 17, 2024

திருப்பூர்: போக்குவரத்து நெரிசல்… மக்கள் அவதி

image

காங்கேயம் பஸ் நிலையத்திலிருந்து பழைய கோட்டை சாலை போக்குவரத்து பணிமனை வரை இருபுறமும் மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்தச் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்தக் கடைகளில் பொருட்களை வாங்க வருபவர்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.

Similar News

News October 15, 2025

திருப்பூர்: வங்கதேச பெண் உட்பட மூவருக்கு சிறை!

image

திருப்பூர்: இடுவம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட நிஷா அக்தர் என்ற பெண் உட்பட 3 பேருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2025

திருப்பூர்: கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

image

திருப்பூர் மக்களே.., கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 15, 2025

திருப்பூர்: தாய் – மகனுக்கு கத்தி குத்து!

image

திருப்பூர்: முத்தையன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சிவகாமி(45). டெய்லரான இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஆனந்தன் என்பவர் மூலம் பணியில் சேர்ந்தார். சேர்ந்த மூன்றே நாட்களில் வேலையை விட்டு நின்ற இவர், ஆனந்திடம் தனது சம்பள பணத்தை கேட்டு வந்துள்ளார். தொடர்ந்து வீட்டிலேயே தகராரு செய்த தாய் – மகனை ஆனந்தன் கத்தியால் குத்தினார். தற்போது இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.

error: Content is protected !!