News December 23, 2025
திருப்பூர் பொதுமக்களுக்கு காவல்துறை அறிவிப்பு

திருப்பூர் மாநகரில் இன்று (23/12/2025) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். இரவு நேரங்களில் ஏற்படும் குற்ற சம்பவங்களை உடனடியாக ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News January 1, 2026
உடுமலை அருகே விபத்து: இளைஞர் பலி

திருப்பூர், உடுமலை யூகேபி நகரை சேர்ந்த உத்தமராஜ் மகன் விக்னேஷ். இவர் நேற்று திருப்பூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த நிலையில், அம்மாபட்டி பிரிவு அருகே கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பலியானார்.
News December 31, 2025
திருப்பூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
திருப்பூர்: இ-சேவை மையம் இயங்காது

திருப்பூரில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மையங்கள் பராமரிப்பு பணியால் டிச.31 (ம) ஜன.1-ம் தேதி ஆகிய தேதிகளில் செயல்படாது. மேலும், ஜன.2-ம் தேதி முதல் வழக்கம் போல் மையங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை ஷேர் பண்ணுங்க.


