News April 9, 2025
திருப்பூர்: பல்லடம் புத்தரச்சல் 108 பைரவர் ஆலயம்!

திருப்பூர், பல்லடம் புத்தரச்சல் கிராமத்தில் புகழ்பெற்ற 108 பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில், 21 அடி உயரத்தில் கால பைரவர் சிலை உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News April 18, 2025
திருப்பூர்: கடன் தொல்லையால் தற்கொலை

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி மகன் தங்கராஜ். இவர் கடந்த 8 வருடங்களாக திருப்பூர்,வெள்ளகோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் வீட்டின் அருகில் மளிகை கடையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக, கடன் தொல்லையால், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கை விரக்தியடைந்த தங்கராஜ், நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 17, 2025
கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவில் மாவட்ட அளவிலான 21நாட்கள் இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம்
நடக்கிறது. 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள், வருகிற 24ம் தேதி, மாலை 6 மணி வரை மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில், பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை
கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
திருப்பூர்: கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய எண்கள்!

▶️திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971137/38/40. ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100. ▶️விபத்து அவசர வாகன உதவி 102. ▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098. ▶️பெண்கள் உதவி எண் 181. ▶️பேரிடர் கால உதவி1077. ▶️கிராம ஊராட்சி குறை தீர் கட்டுப்பாட்டு அறை 0421 – 2971163, 1800 425 7023. ▶️சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.