News October 21, 2025

திருப்பூர் பயணிகளின் கவனத்திற்கு!

image

வரும் நவம்பர் மாதத்தில் இருந்து, எர்ணாகுளம் – பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’ ரயில் இயங்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுக்கு ஏற்ப, புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நாட்கள் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 3, 2025

திருப்பூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!

News November 3, 2025

BREAKING: திருப்பூரில் தீக்குளித்த பெண் பலி!

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று உடுமலையை சேர்ந்த கௌசல்யா (36) என்ற பெண், குடும்ப பிரச்சினை காரணமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை மீட்ட காவல்துறையினர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கௌசல்யா, சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

News November 3, 2025

திருப்பூர்: B.E / B.Tech படித்திருந்தால் ரூ.40,000 சம்பளம்!

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / B.Tech படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் பண்ணுங்க. கடைசி தேதி 14.11.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!