News March 25, 2025
திருப்பூர்: பனியன் நகருக்கு வந்த சோதனை

பனியன் தொழில் மாநகரமான திருப்பூரில் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசே தடை விதித்திருந்தாலும் கூட, பல்வேறு பகுதிகளில் தடை இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை பயன்பாடு முடிந்த பிறகு குப்பைகளில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 09.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம், அவிநாசி பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News November 9, 2025
வெள்ளகோவிலில் அடித்தே கொலை

வெள்ளகோவில் அருகே கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (77), இவரது மனைவி புஷ்பாத்தாள் (67). கடந்த 10 ஆண்டுகளாக இத்தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், நேற்று இரவு இதே போல் இவர்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட தகராறு ஏற்பட கட்டையால் புஷ்பாத்தாளை, பெரியசாமி தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார். இதனையடுத்து பெரியசாமி-யை கைது செய்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 9, 2025
திருப்பூர்: G Pay, PhonePe இருக்கா?

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


