News December 28, 2025

திருப்பூர்: பதிவு செய்தால் ரூ.5 லட்சம் கிடைக்கும்!

image

CMன் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். இதை SHARE பண்ணுங்க!

Similar News

News December 31, 2025

திருப்பூர்: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி! SUPER NEWS

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (SHARE பண்ணுங்க)

News December 31, 2025

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

image

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வருகிற 7-ந்தேதி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. வகுப்பில் கலந்து கொள்ள திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.

News December 31, 2025

உடுமலை: கழுத்தை நெறித்து கொன்ற கணவன்.. அதிரடி தீர்ப்பு

image

உடுமலையைச் சேர்ந்தவர் ஆகாஷ்ராஜ். இவர் கஜிதாபேகம் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கஜிதாபேகம், 8 மாதம் கர்ப்பிணியாக இருந்த போது, 2015-ல் குடும்ப பிரச்சனை ஏற்பட்டது. அப்போது, கஜிதாபேகத்தை கழுத்தை நெரித்து கொன்றார். இதுகுறித்து வழக்கு, திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று, ஆகாஷ்ராஜ்-க்கு ஆயுள் (ம) 20,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!