News March 5, 2026

திருப்பூர்: பசு மாடு வாங்க ரூ.1,00,000

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 9, 2026

கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த 690 மனுக்கள்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 690 மனுக்களை அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுக்கள் அந்தந்த துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 9, 2026

திருப்பூர்: POST OFFICE வேலை! வெளியான RESULT

image

இந்திய போஸ்ட் ஆஃபிசில் அறிவிக்கப்பட்ட 28,740 ஜிடிஎஸ் பணியிடங்களுக்கான மெரிட் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. விண்ணப்பித்தவர்கள் இங்கு <>கிளிக் செய்து<<>> முடிவுகளை பார்க்கலாம். மேலும், தேர்வு செய்யப்படடவர்களுக்கு மார்ச்.23-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. அதன் பின் பணி நியமனம் நடைபெறும். உதவி போஸ்ட் மாஸ்டர், ஜிடிஎஸ் பணிகளுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை சம்பளம் கிடைக்கும். (SHARE)

News March 9, 2026

திருப்பூர்: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

error: Content is protected !!