News September 4, 2025
திருப்பூர்: நாய்கள் மர்ம சாவு!

திருப்பூர் :பல்லடத்தில் 8 நாய்கள் மர்மமாக இறந்ததால், விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என விலங்கு நல ஆர்வலர்கள் சந்தேகித்தனர். அவர்கள் கோரிக்கையைத் தொடர்ந்து, போலீசார் முன்னிலையில் நகராட்சி மயானத்தில் புதைக்கப்பட்ட நாய்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, கால்நடை துறை உதவி இயக்குனர் அன்பரசு தலைமையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது
Similar News
News April 6, 2026
திருப்பூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (எ.கா. A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News April 6, 2026
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி!

திருப்பூர் 2-வது ரயில்வே கேட் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 6, 2026
திருப்பூர்: கோடிக்கணக்கில் சிக்கிய பணம்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் தலா 9 குழுக்கள் வீதம் மொத்தம் 72 பறக்கும் படைகளும், 72 நிலை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. மார்ச் 15 முதல் நேற்று காலை வரை நடைபெற்ற சோதனையில், ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.8,59,74,187 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.1,62,67,377 மதிப்பிலான பரிசுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


